ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம் கடலில் கலந்து வீணாகிறது

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தினமும் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று வருகிறது.
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம் கடலில் கலந்து வீணாகிறது
Published on

ஸ்ரீவைகுண்டம்,

மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பெரிய அணையான பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. இதை தொடர்ந்து அணைகளில் இருந்து உபரி தண்ணீர் திறக்கப்பட்டு, தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது.

கடலில் வீணாகும் தண்ணீர்

பாபநாசம் அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீ திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீருடன் வழியில் காட்டாற்று தண்ணீரும் சர்ந்து தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

இந்த ஆற்றின் கடைசி அணைக்கட்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது. இந்த அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், வினாடிக்கு 6ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், அணையிலிருந்து ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் வினாடிக்கு 154 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தென்கால்வாய்க்காலில் வினாடிக்கு 450 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதைப்போல் மருதூர் அணையில் இருந்து வினாடிக்கு 5,200 கன அடி தண்ணீரும், மேலக்கால் வாய்காலிருந்து வினாடிக்கு 800கனஅடி தண்ணீரும் கீழக்கால் வாய்க்காலிருந்து வினாடிக்கு 400 கனஅடி தண்ணிர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் முற்றிலுமாக கடலுக்கு சென்று வீணாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com