11 சட்டசபை தொகுதிகளில் 61,745 பேர் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள்- கலெக்டர் ராமன் தகவல்

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 61,745 பேர் உள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
11 சட்டசபை தொகுதிகளில் 61,745 பேர் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள்- கலெக்டர் ராமன் தகவல்
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 61,745 பேர் உள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

பறக்கும்படை

சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றது. மேலும், தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 0427-1950 என்ற தொலைபேசி எண்ணிலோ, 1800 4257 020 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம்.

கெங்கவல்லி, ஆத்தூர்

சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி (தனி) சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,38,253 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,412 பேரும், 2,883 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். ஆத்தூர் (தனி) சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,53,800 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 5,537 வாக்காளர்கள் 80 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். மேலும் 2,747 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர்.

ஏற்காடு (தனி) சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,82,656 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,017 பேரும், 3,145 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். ஓமலூர் சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,94,712 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 6,040 வாக்காளர்கள் 80 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 3,322 மாற்றுத்திறனாளி வாக்காளர்களாகவும் உள்ளனர்

மேட்டூர், எடப்பாடி

மேட்டூர் சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,85,767 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 6,565 வாக்காளர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். மேலும் 2,441 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். எடப்பாடி சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,84,378 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 6,079 வாக்காளர்கள் 80 வயதுக்கு மேற்பட்டோர்களாகவும், 2,429 மாற்றுத்திறனாளி வாக்காளர்களாகவும் உள்ளனர்.

சங்ககிரி சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,73,143 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,945 பேரும், 2,116 மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர்.

சேலம்

சேலம் மேற்கு சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,97,985 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 6,189 வாக்காளர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், 1,456 மாற்றுத்திறனாளி வாக்காளர்களாகவும் உள்ளனர்.

சேலம் வடக்கு சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,74,776 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 6,019 வாக்காளர்கள் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர். மேலும் 1,949 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர்.

30 லட்சம் வாக்காளர்கள்

சேலம் தெற்கு சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,59,229 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4,217 வாக்காளர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், 1,579 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். வீரபாண்டி சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,59,441 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4,725 வாக்காளர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், 1,958 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 30 லட்சத்து 4 ஆயிரத்து 140 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 61 ஆயிரத்து 745 பேர் உள்ளனர். மேலும் 26 ஆயிரத்து 25 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com