72-வது பிறந்தநாள் விழா: ஜெயலலிதா சிலைக்கு, அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி, கோவையில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
72-வது பிறந்தநாள் விழா: ஜெயலலிதா சிலைக்கு, அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
Published on

கோவை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் விழா கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க, சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க.வினர் தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, அண்ணா சிலை சிக்னலை அடைந்தனர். அங்கு ஜெயலலிதா சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதன்பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக புறப்பட்டு இதய தெய்வம் மாளிகையை அடைந்தனர். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், வி.சி. ஆறுக்குட்டி, முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுசாமி, செ.தாமோதரன், பா.வெ.தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.ராஜூ, கே.பி.ஆர்.சாந்தாமணி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் டி.கே.அமுல்கந்தசாமி, முன்னாள் மண்டல தலைவர்கள் கே.ஆர்.ஜெயராம், ஆதி நாராயணன், நா.கருப்பசாமி, கணபதி டி.காளிமுத்து, சிங்கை என். முத்து, முன்னாள் எம்.பி. யு.ஆர்.கிருஷ்ணன், முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், ஆர்.தமிழ்முருகன், கணபதி டி.காளிமுத்து, சாரமேடு சந்திரசேகரன். காளப்பட்டி கே.எல்.செந்தில்குமார், கே.வி. ராஜேந்திரன், சிங்கை வசந்தி, முன்னாள் கவுன்சிலர்கள் கலைவாணி சந்திரசேகரன், எஸ்.ஆர்.அர்ஜூனன், செந்தில், சாவித்திரி, யுவராஜ், சிங்கை பாலன், வக்கீல் ராஜேந்திரன், குறிஞ்சி மலர் பழனிசாமி, டியூகாஸ் சுப்பையன்,சாரமேடு பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், டி.ஜே.செல்வகுமார், காட்டூர் செல்வராஜ், கொ.க. சக்திவேல்,ராஜ்குமார், ஆர்.கே.செந்தில்வேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சி.டி.சி. தலைமை அலுவலகத்தில் சி.டி.சி. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடந்த பிறந்த நாள் விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு கோவை அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளரும், கூட்டுறவு பண்டக சாலையின் தலைவருமான சி.டிசி. எம். சின்னராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அ.தி.மு.க. கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தலைவர் ஏ.வேல்முருகன், பொருளாளர் ஏ.செல்வராஜ் மற்றும் மண்டல நிர்வாகிகள் மகாலிங்கம், சாமிநாதன், நாகராஜ், ராஜூ, ராஜேஷ், கே.ஜி.ரங்கசாமி மற்றும் ஏராளமான கிளை தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவை உக்கடம் மற்றும் சுங்கம் டெப்போவில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்கு சி.டி.சி. எம்.சின்னராஜு தலைமை தாங்கினார். விழாவில் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. கொடியேற்றினார். அம்மன்அர்ச்சுனன் எம்.எல்.ஏ. இனிப்பு வழங்கினார். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com