ஆலங்காயம், மாதனூர் ஓன்றியங்களில் 77 85 சதவீதம் வாக்குப்பதிவு

ஆலங்காயம் மற்றும் மாதனூர் ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 77.85 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஆலங்காயம், மாதனூர் ஓன்றியங்களில் 77 85 சதவீதம் வாக்குப்பதிவு
Published on

வாணியம்பாடி

ஆலங்காயம் மற்றும் மாதனூர் ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 77.85 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஆலங்காயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம், மாதனூர் ஒன்றியங்களில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஆலங்காயம் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர், 17 ஒன்றிய கவுன்சிலர், 27 ஊராட்சி மன்றத் தலைவர், 237 வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு பதிவு நேற்று நடைபெற்றது. காலை முதல் மாலை வரை பெண்கள், இளைஞர்கள், முதியோர், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வமாக வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில்,கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார், அதிரடிபடைவீரர்கள் பாதுகாப்பு பணயில் ஈடுப்பட்டனர். வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் ஆலங்காயம் ஒன்றிய பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கலெக்டர் ஆய்வு

ஆலங்காயம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் மையமான ஆலங்காயம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார். அப்போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு பணிகள் மற்றும் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ள அறைகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் தனது சொந்த கிராமமான பெத்தவேப்பம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. க.தேவராஜி சொந்த கிராமமான செக்குமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் தங்கள் வாக்கினை செலுத்தினர்.

73.48 சதவீதம் வாக்குகள் பதிவு

திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் காமராஜ் ஆலங்காயம் ஒன்றியத்தில் நரசிங்கபுரம், நிம்மியமபட்டு, வெள்ளகுட்டை, மேல் நிம்மியம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆலங்காயம் ஒன்றியத்தில் 94,927 வாக்காளர்களில் 75,427 பேர் வாக்களித்து இருந்தனர். இது 79.46 சதவீதமாகும். இதேபோல் மாதனூர் ஒன்றியத்தில் 1,23,188 வாக்காளர்களில் 94,365 பேர் வாக்களித்திருந்தனர். இது 76.60 சதவீதமாகும். இரண்டு ஒன்றியங்களிலும் சேர்த்து மொத்தம் 77.85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com