பாலமுருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

பெரம்பலூர் பாலமுருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாலமுருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 38-வது ஆண்டு பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 23-ந்தேதி வாஸ்துசாந்தி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு அபிஷேகமும், இரவு மேள தாளம் முழங்க பல்வேறு வாகனத்தில் பாலமுருகன் சமேத வள்ளி-தெய்வானை திருவீதி உலாவும் நடந்து வருகிறது. நேற்று காலை பாலமுருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது.

திருக்கல்யாண உற்சவம்

தொடர்ந்து நாரண மங்கலம் சுத்தரத்தின குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத கோவில் அர்ச்சகர் ரமேஷ், மகேந்திரன் குழுவினர் ஆகியோர் வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திகளுக்கு மங்கலநாணை அணிவித்து திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தனர். பின்னர் முருகன், வள்ளி-தெய்வானை மூர்த்திகளுக்கு மாலை மாற்றும் வைபவமும், மகாதீபாராதனையும் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தில் மக்கள் நற்ப்பணி மன்ற நிர்வாகிகள், மேட்டுத்தெரு, பாரதிதாசன் நகர், எளம்பலூர் சாலை, முத்துநகர், கணக்கபிள்ளை காலனி, சாமியப்பாநகர், ரெங்காநகர், வடக்குமாதவி சாலை, மதனகோபாலபுரம், புதிய மதனகோபாலபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி கயிறு மற்றும் மங்கல பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. காலை தொடங்கி மாலை வரை மகா அன்னதானமும் நடந்தது. பங்குனி உத்திர சப்பரத்தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com