

கன்னியாகுமரி,
குமரி மாவட்டம் அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். இதை தொடர்ந்து அவருக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தில் அமைந்துள்ள ஒன்றிய தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். இதில் மாநில அ.தி.மு.க.இலக்கிய அணி இணைச் செயலாளர் கவிஞர் சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
சிறப்பான வரவேற்பு
இந்த கூட்டத்தில் அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 22-ந்தேதி குமரி மாவட்டம் வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் அ.தி.மு.க.அமைப்புச்செயலாளருமான தளவாய்சுந்தரம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது
இந்தக் கூட்டத்தில் பேரூர் செயலாளர்கள் ஆடிட்டர் சந்திரசேகரன், மனோகரன், கைலாசம், ராஜபாண்டியன், வீரபத்திர பிள்ளை, குமார், சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் ராஜேஷ், குமரகுரு, பாலமுருகன், கண்ணன், கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் காட்வின் ஏசுதாஸ், துணைத் தலைவர் சுரேஷ், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பகவதியப்பன், குலசேகரபுரம் பஞ்சாயத்து தலைவர் சுடலையாண்டி, கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் கண்ணன், ஊராட்சி பொறுப்பாளர்கள் லீன், பார்த்தசாரதி, முத்துசாமி, ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம், வக்கீல் பிரிவு துணைச் செயலாளர் பாலன், கொட்டாரம் பேரூர் நிர்வாகிகள் சொர்ணப்பன், பிரபாகரன், கார்த்திக்குமார், ஜெகதீஷ், பிரம்மநாயகம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் நாகசாயி அறங்காவலர் குழு உறுப்பினர் சதாசிவம் உள்படபலர்கலந்துகொண்டனர்.