மாவட்டம் முழுவதும் குரூப்-4 தேர்வை 81 ஆயிரத்து 349 பேர் எழுதினார்கள் கலெக்டர் நேரில் ஆய்வு

வேலூர் மாவட்டம் முழுவதும் குரூப்-4 தேர்வை 81 ஆயிரத்து 349 பேர் எழுதினார்கள். தேர்வு மையங்களை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
மாவட்டம் முழுவதும் குரூப்-4 தேர்வை 81 ஆயிரத்து 349 பேர் எழுதினார்கள் கலெக்டர் நேரில் ஆய்வு
Published on

வேலூர்,

தமிழ்நாடு அமைச்சுப்பணி மற்றும் நீதி அமைச்சுப்பணி, நில அளவை மற்றும் நில பதிவேடு சார்நிலை பணி, தலைமை செயலக பணிகளில் காலி பணியிடங்களான கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் நிலை-1, நில அளவர், வரை வாளர், தட்டச்சர் மற்றும் சுருக் கெழுத்து தட்டச்சர் ஆகிய காலி பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்வ தற்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நேற்று நடை பெற்றது.

தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 351 காலி பணியிடங் களுக்கு சுமார் 21 லட்சம் பேர் விண்ணப்பித் திருந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு எழுத 94 ஆயிரத்து 291 பேர் விண்ணப்பித்திருந்தனர். மாவட்டத்தில் 312 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன. குரூப்-4 தேர்வை 81 ஆயிரத்து 349 பேர் எழுதினர். 12 ஆயிரத்து 942 பேர் தேர்வு எழுத வரவில்லை. வேலூர் மாவட்டத்தில் 86 சதவீதம் பேர் தேர்வு எழுத வருகை தந்தனர்.

தேர்வை கண்காணிக்க தேர்வு மையத்துக்கு 312 முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள், 312 ஆய்வு அலுவலர்கள், 46 நடமாடும் வாகன அலுவலர்கள், 22 பறக்கும் படை அலுவலர்கள், 244 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 1,200 பேருக்கு மேல் தேர்வெழுதும் மையங்களில் கூடுதலாக ஒரு வீடியோ கிராபர் பணியமர்த்தப் பட்டனர்.

வேலூர் ஊரீசு கல்லூரியில் அமைந்துள்ள தேர்வு மையத்தை வேலூர் கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந் தனர். இதேபோல் ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள தேர்வு மையத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தேர்வர்கள் செல்போன், கைகெடிகாரம், கால் குலேட்டர் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு அறைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைத்து தேர்வு மையங் களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி செய்யப்பட்டிருந்தன. தேர்வர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com