தென்மும்பை அரசு விருந்தினர் மாளிகையில் திடீர் விபத்து; மந்திரி ஆதித்ய தாக்கரே உயிர் தப்பினார்

அரசு விருந்தினர் மாளிகையில் அரங்கின் மேற்பரப்பு பலகை இடிந்து விழுந்த விபத்தில் மந்திரி ஆதித்ய தாக்கரே மயிரிழையில் உயிர்தப்பினார்.
தென்மும்பை அரசு விருந்தினர் மாளிகையில் திடீர் விபத்து; மந்திரி ஆதித்ய தாக்கரே உயிர் தப்பினார்
Published on

ஆதித்ய தாக்கரே ஆலேசனை

தென்மும்பையில் மாநில அரசின் சையாத்ரி விருந்தினர் மாளிகை உள்ளது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் மந்திரிகள் இங்கு தான் அலுவல் கூட்டங்களை நடத்துகின்றனர். மேலும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் நேற்று விருந்தினர் மாளிகையில் உள்ள 4-வது எண் அரங்கில் சுற்றுலா துறை மந்திரி ஆதித்ய தாக்கரே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

உயிர் தப்பினார்

இதில் மாலை 5 மணியளவில் அவர் ஆலோசனை நடத்திய அறைக்கு வெளியே இருந்த அரங்கின் மேற்பரப்பு பலகை (பி.ஒ.பி.), அலங்கார விளக்குகள் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு அதிகாரிகள், ஊழியர்கள் பதறி அடித்து கொண்டு ஓடினர். எனினும் அந்த நேரத்தில் யாரும் அந்த பகுதியில் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.இதேபோல மந்திரி ஆதித்ய தாக்கரே அந்த நேரத்தில் அறையில் இருந்து வெளியே வந்து இருந்தால் விபத்த சந்தித்து இருப்பார். அவர் அதிர்ஷடவமாக உயிர் தப்பினார்.அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த இந்த விபத்து பெரும்

அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் தகவல் அறிந்து வந்த பொதுப்பணித்துறையினர் ஒட்டுமொத்த விருந்தினர் மாளிகையிலும் தணிக்கை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com