வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் மூலம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரம் பேர் விண்ணப்பம் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர், சேர்த்தல் சிறப்பு முகாமில் இதுவரை 30 ஆயிரத்து 240 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் மூலம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரம் பேர் விண்ணப்பம் - கலெக்டர் தகவல்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை வருவாய்ப் பணியாளாகள் ஆய்வு செய்து வருகின்றனர். இப்பணிகளை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், காஞ்சீபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட சேக்குப்பேட்டை மற்றும் நடுத்தெரு பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியின் கீழ் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மைய அமைப்பு இடங்களில் கடந்த மாதம் 21 மற்றும் 22-ந் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் இதுநாள் வரையில் பெயர் சேர்த்தலுக்காக 24 ஆயிரத்து 374 படிவங்களும், வாக்காளார் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடாபாக வெளிநாடு இந்தியரிடமிருந்து 1 படிவமும், பெயர் நீக்குதல் தொடர்பாக 1,629 படிவங்களும், பெயர் மற்றும் முகவரி திருத்தம் தொடாபாக 4 ஆயிரத்து 236 படிவங்களும் ஆக மொத்தம் 30 ஆயிரத்து 240 படிவங்கள் இதுநாள் வரையில் பெறப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளா பட்டியலில் பெயா சோத்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடாபாக பொதுமக்கள் அந்தந்த வாக்குசாவடி நிலை அலுவலாகள், உதவி வாக்குஜீபதிவு அலுவலாகள், வட்டாட்சியா, நகராட்சி ஆணையா, வாக்குப்பதிவு அலுவலாகள், வருவாய் கோட்டாட்சியா அலுவலங்களில் வருகிற 15-ந் தேதி வரையில் மனுக்களை பெற்று வழங்கலாம்.

வருகிற டிசம்பர் 12, 13 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் தோதல் ஆணையத்தின் அறிவுரையின்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 504 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது, காஞ்சீபுரம் வருவாய் வட்டாட்சியர் பவானி, வருவாய்த் துறை அலுவலாகள் மற்றும் பணியாளாகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com