அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்து இடப்படும்

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்து இடப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய் சுந்தரம் பிரசாரம் செய்தார்.
தெங்கம்புதூர் பேரூராட்சி பகுதியில் தளவாய்சுந்தரம் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.
தெங்கம்புதூர் பேரூராட்சி பகுதியில் தளவாய்சுந்தரம் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.
Published on

பிரசாரம்

கன்னியாகுமரி சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய் சுந்தரம் நேற்று காலை ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றியம் தெங்கம்புதூர் பேரூராட்சி வைராவிளை பகுதியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். அவர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். மாலையில் புத்தளம் பேரூராட்சி பகுதியில் பிரசாரம் செய்த போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகளிர் தினத்தன்று இரண்டு திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்று குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் திட்டம். மற்றொன்று ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கும் திட்டம் ஆகும்.

முதல் கையெழுத்து

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சர் இந்த 2 திட்டங்களுக்கும் முதல் கையெழுத்தை இடுவார். எனவே அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com