

காஞ்சீபுரம்,
இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை முடிந்து நேற்று தேர்தல் ஆணையம் இறுதி தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதையொட்டி காஞ்சீபுரம் தேரடியில் முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் தேரடி ஆஞ்சநேயருக்கு 108 தேங்காய் உடைக்கப்பட்டது. மேலும் பட்டாசு வெடித்து, பொதுமக்கள், பஸ் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
பின்னர் அ.தி.மு.க.வினர் காந்திரோடு, மூங்கில்மண்டபம், வள்ளல் பச்சையப்பன் தெரு, காமராஜர் தெரு, பஸ் நிலையம், இரட்டை மண்டபம் வழியாக ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் வள்ளிநாயகம், ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வாலாஜாபாத்தில் ஒன்றிய செயலாளர் அக்ரி நாகராஜன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், நகர செயலாளருமாக டி.சீனிவாசன் தலைமையில் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதில் வக்கீல் பி.கேசவேலு, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எஸ்.டி.பிரசாத், மு.ரோஸ், கே.கன்னியப்பன், டி.எஸ்.ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் அ.தி.மு.க. அலுவலகத்தின் முன்பு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.கவுஸ்பாஷா தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் கே.ஆறுமுகம் மரகதம் குமரவேல் எம்.பி. முன்னாள் நகர்மன்ற தலைவர் எம்.ஜி.கே. கோபிகண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பட்டாசு வெடித்தும் எம்.ஜி.ஆர். உருவசிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகளை வழங்கினார்கள். இதில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.சல்குரு ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் சந்தானகிருஷ்ணன். கிளை செயலாளர் எழிலரசன் கண்ணன். கே.வி.என்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே முன்னாள் ஒன்றிய குழு தலைவர் புட்லூர் ஆர்.சந்திரசேகர், முன்னாள் திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் கமாண்டோ பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார்கள்.
அதேபோல மணவாளநகர் சந்திப்பு பகுதியில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன், நிர்வாகிகள் பாசூரான், பட்டாபி, இன்பநாதன், ஞானகுமார் உள்பட திரளான அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பொன்னேரியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான சிறுணியம் பலராமன் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினர். தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்போது எம்.ஜி.ஆர். மன்ற துணைசெயலாளர் பானுபிரசாத், ஒன்றியசெயலாளர் மோகனவடிவேல், கூட்டுறவுசங்க இயக்குனர் பொன்னுதுரை, கூட்டுறவுசங்க தலைவர்கள் தத்தைஅருள், சம்பத், ஒன்றியபேரவை செயலாளர் திருமலை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் இருந்தனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் பாண்டறவேடு கிராமத்தில் பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் டி.டி.சீனிவாசன் பட்டாசுகள் வெடித்து அனைவருக்கும் லட்டுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சாந்திபிரியா சுரேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டையில் திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம். நரசிம்மன் பட்டாசுகள் வெடித்து லட்டுகள் வழங்கினார்.
பள்ளிப்பட்டு நகரத்தில் நகர செயலாளர் சண்முகம் பட்டாசுகள் வெடித்து அனைவருக்கும் லட்டுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பாலன், சேகர், சிட்டிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.