அம்மூர் பேரூராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

அம்மூர் பேரூராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அம்மூர் பேரூராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
Published on

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் உஷாராணி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் 21 பொருட்கள் மன்றத்தின் தீர்மானத்திற்காக வைக்கப்பட்டது. அப்போது பா.ம.க. உறுப்பினர்கள் சீனிவாசன், சரவணன், அ.தி.மு.க. உறுப்பினர்கள் ராஜாஜி, வரலட்சுமி தினகரன் உள்ளிட்டோர் மன்றத்தில் வைக்கப்பட்ட பொருட்களின் மீது விவாதம் செய்தனர்.

மன்றத்தில் அனைத்து தீர்மானங்களுக்கும் வெளிப்படை தன்மை வேண்டும், பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படக்கூடாது, வெளிப்படை தன்மை இல்லாவிட்டால் நிர்வாகம் சீர்கேடு அடைந்துவிடும், நிர்வாகம் சீர்கேடு அடைய துணை போகமாட்டோம், என்று கூறி அ.தி.மு.க. உறுப்பினர்கள் ராஜாஜி, சரசா, வேதம்மாள், ரமேஷ், வரலட்சுமி தினகரன் ஆகிய 5 பேரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதன் பின்னர் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பா.ம.க. உறுப்பினர்களும் கூட்டத்தில் இருந்து கிளம்பி சென்றனர்.

தலைவர், துணைத்தலைவர், செயல் அலுவலர் மற்றும் திமுக உறுப்பினர்கள் 6 பேர் மட்டும் கூட்ட அரங்கில் இருந்தனர். அப்போது தலைவர் கூட்டம் தொடர்ந்து நடைபெறுவதாக கூறி கூட்டத்தை நடத்தினார்.

இதில் பிரச்சினைக்குரிய தீர்மானங்கள் தவிர்த்து மற்ற அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதில் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் 6 தி.மு.க. உறுப்பினர்கள் கையொப்பமிட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com