திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், கிளினிக்குகளை பதிவு செய்ய வேண்டும் - கலெக்டர் அறிவுரை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், கிளினிக்குகளை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், கிளினிக்குகளை பதிவு செய்ய வேண்டும் - கலெக்டர் அறிவுரை
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பல் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள், ஆயுஷ் கிளினிக், எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை மையங்கள், சித்தா கிளினிக், எம்.ஆர்.ஐ. சி.டி.ஸ்கேன் மற்றும் அனைத்து கிளினிக்குகளும் தமிழ்நாடு கிளினிக்கல் எஸ்டாபிளிஷ்மெண்ட்ஸ் விதிகள் 2018-ன் படி பதிவு செய்ய வேண்டும்.

இதற்கான உரிய விண்ணப்பத்தினை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிற்கான கட்டணத்தை ரூ.5 ஆயிரம் வங்கி வரைவோலையாக திருவண்ணாமலை மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் எனும் பெயரில் எடுத்து, தீயணைப்பு சான்றிதழ், மாசு கட்டுப்பாட்டு நிறுவனச் சான்றிதழ், பையோ மெடிக்கல் வேஸ்ட் சான்றிதழ், கட்டிட அனுமதிச் சான்று மற்றும் கட்டிட ஸ்திரத்தன்மை சான்று ஆகியவற்றையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் tam-i-l-n-adu cl-i-n-i-c-al என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு மருத்துவமனையில் ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டால் ஒவ்வொரு மருத்துவமுறைக்கும் ரூ.5 ஆயிரம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com