மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்படும் தொல்லைக்கு முடிவு கட்ட அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும்

மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்படும் தொல்லைக்கு தீர்வுகாண அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு, காங்கிரஸ் கட்சியின் மும்பை தலைவர் சஞ்சய் நிருபம் கடிதம் எழுதியுள்ளார்.
மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்படும் தொல்லைக்கு முடிவு கட்ட அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும்
Published on

மும்பை,

புதிய சட்ட விதிகளின் படி மெட்ரோ ரெயில் பணிகள் இரவில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் விளைவாக சுற்றுவட்டார பகுதி மக்கள் நாள் முழுக்க உழைத்துவிட்டு வந்து வீட்டில் தூங்க முடியாத நிலை ஏற்படுள்ளது. மெட்ரோ ரெயில் பணிகளால் ஏழும் சத்தமானது பெரியவர்கள் மட்டும் அல்லாமல் சிறுவர்களின் படிப்புக்கும் இடையூராக உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் மெட்ரோ ரெயில் பணிகளால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. எளிதாக 30 முதல் 40 நிமிடத்தில் சென்றுவிட கூடிய இடங்களுக்கு சென்று சேர 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காத்துக்கிடக்கவேண்டி உள்ளது. இதன் காரணமாக ஒலி மாசுபாடு, பயணம் செய்பவர்களுக்கு மன உளைச்சலால் தேவையற்ற உடல்நல பாதிப்பு போன்றவை ஏற்படுகிறது.

காங்கிரஸ் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு கண்டிப்பாக ஆதரவு தெரிவுக்கும். இருப்பினும், இதன் காரணமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும். மெட்ரோ ரெயில் திட்டங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு உடனடியாக அரசு தீர்வுகாணவேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு அவர் தன் கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com