குரங்கணி காட்டுத்தீ சம்பவம் எதிரொலி: போடி முந்தல் சோதனை சாவடியில் புதிய கண்காணிப்பு கேமரா

குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தை தொடர்ந்து, போடி முந்தல் சோதனை சாவடியில் புதிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
குரங்கணி காட்டுத்தீ சம்பவம் எதிரொலி: போடி முந்தல் சோதனை சாவடியில் புதிய கண்காணிப்பு கேமரா
Published on

போடி,

தேனி மாவட்டம், போடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் முந்தல் மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு செல்லும் சாலையில் வனத்துறை, போலீசார் சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை சாவடிகள் வழியாக தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்லும் வாகனங்களும், குரங்கணி மலைக்கு செல்லும் வாகனங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த சாலை வழியாக தினமும் கேரள மாநிலத்துக்கு ஏலக்காய் தோட்டத்துக்கு கூலிவேலைக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வாகனங்களின் டிரைவர்கள் தங்களுடைய முழு விவரங்களை சோதனை சாவடிகளில் உள்ள பதிவேட்டில் எழுதி வைத்து விட்டு செல்கின்றனர்.

இந்த போலீஸ் சோதனை சாவடியில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா செயல்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாகனங்களை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 11ந் தேதி குரங்கணி காட்டுத்தீ சம்பவம் நடந்தது. அந்த நேரத்தில் சென்ற வாகனங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகவில்லை என கூறப்படுகிறது.

குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தை தொடர்ந்து, போடி முந்தல் சோதனை சாவடியில் செயல்படாத கண்காணிப்பு கேமராவை அகற்றி விட்டு, புதிய கேமரா பொருத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இந்த சோதனை சாவடியில் புதிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com