அனந்தகுமாரின் வாழ்க்கை குறிப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1959-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி அன்று நடுத்தர பிரமாண குடும்பத்தில் நாராயண சாஸ்திரி மற்றும் கிரிஜா சாஸ்திரிக்கு மகனாக அனந்தகுமார் பிறந்தார். அவரது தந்தை நாராயண சாஸ்திரி ரெயில்வே துறையில் பணியாற்றினார்.
அனந்தகுமாரின் வாழ்க்கை குறிப்பு
Published on

பெங்களூரு,

மாணவ பருவத்தில் ஏ.பி.வி.பி. அமைப்பில் சேர்ந்தார். தனது பள்ளி கல்வியை உப்பள்ளியில் முடித்தார். பின்னர் சட்டப்படிப்பு பயின்றார். அதன் பிறகு பெங்களூருவில் வந்து குடியேறி, தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

இவர் தனது கல்லூரி பருவத்தில் பா.ஜனதாவின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் உறுப்பினராக பணியாற்றி பல்வேறு பொறுப்புகளை வகித்தார். நாட்டில் அமல் படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து போராடினார். இதற்காக அவர் சுமார் 30 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

1987-ம் ஆண்டு அவர் பா.ஜனதாவில் சேர்ந்தார். கட்சியில் அவர் மாநில செயலாளர், இளைஞர் அணி தலைவர், மாநில பொதுச் செயலாளர், தேசிய பொதுச் செயலாளராக பணியாற்றினார். கர்நாடகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சியில் எடியூரப்பாவுக்கு அடுத்தபடியாக அனந்தகுமார் முக்கிய பங்கு வகித்தார் என்று அக்கட்சியினர் சொல்கிறார்கள்.

1996-ம் ஆண்டு பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் அனந்தகுமார் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தொகுதியில் அவர் தொடர்ச்சியாக 6 முறை போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வாகியுள்ளார். 1998-ம் ஆண்டு வாஜ்பாய் மந்திரிசபையில் மந்திரியாக இடம் பெற்றார். அவர் மிக இளம் வயது மந்திரி என்ற பெயரை பெற்றார்.

அவர் விமானம், சுற்றுலா, விளையாட்டு, நகர வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புத்துறை மந்திரியாக பணியாற்றினார். நாடாளுமன்ற நிலைக்குழுக்களிலும் பதவி வகித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com