குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

குடிநீர்கேட்டு சேடபட்டி யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
Published on

உசிலம்பட்டி,

பேரையூர் தாலுகா சேடபட்டி யூனியன் துள்ளுக்குட்டி நாயக்கனூர் ஊராட்சியை சேர்ந்தது டி.கிருஷ்ணாபுரம் இந்திராகாலனி. இந்த காலனியில் 150 அருந்ததியினர் குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் குடிக்க தண்ணீர் இல்லாமல் அருகிலுள்ள தோட்டங்களில் சென்று தண்ணீர் பிடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் விடுதலை சேகரன் தலைமையில் சேடபட்டி யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். முற்றுகை போராட்டம் நடத்திய பெண்களிடம் ஆணையாளர் ஆசிக் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதைதொடர்ந்து கலைந்து சென்ற அவர்கள் விரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் டி.கிருஷ்ணாபுரம் இந்திரா காலனியில் சாலைமறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com