திருநள்ளாறு, கோட்டுச்சேரி கொம்யூன்களில் ரூ.8கோடி செலவில் குடிநீர் தொட்டிகள் நாராயணசாமி பணிகளை தொடங்கி வைத்தார்

திருநள்ளாறு, கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துகளில் நபார்டு வங்கி சார்பில் ரூ.8 கோடி செலவில் மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
திருநள்ளாறு, கோட்டுச்சேரி கொம்யூன்களில் ரூ.8கோடி செலவில் குடிநீர் தொட்டிகள் நாராயணசாமி பணிகளை தொடங்கி வைத்தார்
Published on

காரைக்கால்,

திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்தை சேர்ந்த அம்பகரத்தூர், அத்திபடுகை, செருமாவிளங்கை மற்றும் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்தை சேர்ந்த அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நபார்டு வங்கி மூலம் ரூ.8 கோடி செலவில் மேல்நிலை நீர்தேக்க குடிநீர்தொட்டிகள் கட்டப்படுகின்றன. இந்த பணிக்கான பூமிபூஜை அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது.

அம்பகரத்தூர் பகுதியில் நடைபெற்ற பூமிபூஜையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ஆதர்ஷ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனைதொடர்ந்து, அத்திபடுகை, செருமாவிளங்கை, கோட்டுச்சேரி அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டிகள், காரைக்கால் பிள்ளைத்தெருவாசல்-நெடுங்காடு ஆகிய பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள் தொடக்க நிகழ்ச்சியிலும் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் தொகுதி எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர்கள் பழனி, பக்கிரிசாமி, உதவி பொறியாளர்கள் வீர செல்வம் மகேஷ் மற்றும் பலர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com