அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி - கலெக்டர் பங்கேற்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் கந்தசாமி, அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி - கலெக்டர் பங்கேற்பு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திக்கை தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த விழாவிற்காக பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நேற்று அதிகாலை 5.30 மணியில் இருந்த 7 மணிக்குள் நடந்தது.

இதையொட்டி கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், பந்தக்காலுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் கோவில் பிச்சகர் ரகு பந்தக்காலை கோவில் ராஜகோபுரம் வரை சுமந்து வந்தார். அதைத் தொடர்ந்து பந்தக்காலிற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, கோவில் இணை ஆணையர் ஞானசேகர், வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, நகராட்சி ஆணையர் சுரேந்தர், திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் பாரி பா.பாபு, திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர்புற வங்கி தலைவர் குணசேகரன், அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வம், முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் அரங்கநாதன், ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய பாசறை செயலாளர் பழனிராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலியபெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com