விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது

விவசாயிகளுக்கான அறிவியல் முறையில் தானிய சேமிப்பு, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது.
விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது
Published on

காஞ்சீபுரம்,

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் அறிவியல் முறையில் தானிய சேமிப்பு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடந்தது. இந்த பயிற்சிக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தை-லைமை வகித்து தொடங்கி வைத்து பேசினார்.

விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை அறிவியல் முறையில் சேமித்து அதன் மூலம் அவர்களுக்கு கடன் வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்து அவர்களின் நலனை மேம்படுத்துகிறது. தமிழ்நாடு சேமிப்பு கிடங்குகளை பொறுத்தவரையில் சென்னை மண்டலத்தில் 9 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள இந்த சேமிப்பு கிடங்குகளின் கொள்ளளவு 1 லட்சத்து 14 ஆயிரத்து 255 மெட்ரிக் டன் ஆகும்.

இந்த பயிற்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி அ.நூர்முகமது, முதுநிலை மண்டல மேலாளர் ஏ.சுந்தரராஜன், இணை இயக்குனர் (வேளாண்மை) பி.ஏ. குணசேகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லதாபானுமதி, சிறப்பு அழைப்பாளர் லட்சுமிபதி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த பயிற்சியில் காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களை சேர்ந்த 150 விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com