ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி உத்திரமேரூர் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அன்னதானங்களும் நடைபெற்றது.
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி உத்திரமேரூர் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
Published on

உத்திரமேரூர்,

இதில், உத்திரமேரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தங்க பஞ்சாசரம், கே.ஆர்.தர்மன், பிரகாஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதைத்தொடர்ந்து, உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் அ.தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்த மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய அவைத்தலைவர் ராஜாமணி, நகர இளைஞரணி பொருளாளர் துரைபாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கவுஸ் பாஷா தலைமையில் 72 கிலோ ராட்சத கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

முன்னதாக எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் கவுஸ் பாஷா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

1000 பேருக்கு சாம்பார் சாதம், புளிசாதம், கேசரி வழங்கப்பட்டன. விழாவில் ஒன்றிய துணை செயலாளர் வடகால் மாரி, ஊராட்சி கழக செயலாளர் சந்தான கிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் பலராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொன்டனர்.

இதனையடுத்து புலிப்பாக்கம், பாலூர், கொளத்தூர், வெண்பாக்கம், ஊரப்பாக்கம், மறைமலைநகர், வண்டலூர், ரத்தினமங்களம், ஓட்டேரி, வேங்கடமங்களம், வல்லம், குமிழி, பாரேரி, விஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பிறந்த நாள் விழாக்களில் சிறப்பு விருந்தினராக கவுஸ் பாஷா கலந்து கொண்டு பிரியாணி வழங்கினார்.

செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் மேலேரிப்பாக்கம் கூட்டுறவு வங்கி சங்க தலைவருமான கே.சல்குரு தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக மத்திய மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் கவுஸ் பாஷா, முன்னாள் எம்.பி.மரகதம் குமரவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு 72 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர்.

பின்னர் 500 ஏழை, எளிய பெண்களுக்கு சேலைகளை வழங்கினார்கள். மேலும் இருங்குன்றம் பள்ளியில் உள்ள பாலமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானங்கள் வழங்கினார்கள். இதில் ஆலப்பாக்கம் ஊராட்சியில் இருந்து ஏராளமான பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com