

ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முழு உடல் பரிசோதனை முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜெயஸ்ரீ, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விஸ்வநாதன், அறந்தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ராதாகிருஷ்ணன், மாரிக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமசந்திரதுரை, மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில்குமார், இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப் பாளர் கணேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.