வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை

காஞ்சீபுரத்தை அடுத்த சோகண்டி பகுதியை சேர்ந்தவர் நிர்மல்சேவியர். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு, தற்போது சோகண்டியில் வசித்து வருகிறார்.
வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை
Published on

காஞ்சீபுரம்,

நேற்று காலை இவர் தனது மாமியார் வீடான, திருவள்ளூர் மாவட்டம் பன்னூருக்கு சென்றார். மதியம் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 பவுன் நகை, ரூ.1 லட்சம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து நிர்மல் சேவியர் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், சுங்குவார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்சக் கரவர்த்தி மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். காஞ்சீபுரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com