தவறுகளை கண்காணிக்க பஸ் நிலையங்கள் பணிமனைகளில் கேமராக்கள் பொருத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தவறுகளை கண்காணிக்க பஸ் நிலையங்கள் மற்றும் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் கேமராக்களை பொருத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தவறுகளை கண்காணிக்க பஸ் நிலையங்கள் பணிமனைகளில் கேமராக்கள் பொருத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

மதுரையைச் சேர்ந்த ராஜேந்திரன் அரசு போக்குவரத்துக்கழகத்தில் 34 ஆண்டுகள் பணிபுரிந்தார். கடந்த 2016-ம் ஆண்டு முதுநிலை கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், அரசு போக்குவரத்துக்கழக மேம்பாடு மற்றும் நிதி கழகத்தின் இணை மேலாண்மை இயக்குனராக பணிபுரியும் சுகுமார், போக்குவரத்துக்கழக நிதியை தவறாக பயன்படுத்தி வருகிறார். இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி சுப்பிரமணியம் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரரின் புகார் மனு தொடர்பாக போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் 6 வாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு போக்குவரத்துக்கழகத்தில் நிர்வாக பொறுப்பில் இருக்கும் உயர் அதிகாரிகள், அவர்களின் மனைவி மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்களா என்பது தொடர்பாக 4 மாதத்தில் விசாரணை நடத்த வேண்டும்.

அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணிகளையும், அங்கு நடைபெறும் தவறுகளையும் கண்காணிக்கவும், பணி மேம்பாட்டுக்காகவும் அனைத்து பஸ் நிலையங்கள், போக்குவரத்துக்கழக பணிமனைகள், நிர்வாக அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com