

கத்தியுடன் திரிந்த வாலிபர்கள்
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள சாமநாயக்கன் பாளையம் அறிவொளி நகர் பிரிவில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் செல்ல சென்றனர். அப்போது சுதாரித்துக்கொண்ட போலீசார் அவர்களை சாமர்த்தியமாக மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். இதில் 3 பேரிடமும் கத்தி இருந்ததும், 3 பேரிடம் பெரியநாயக்கன்பாளையத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.
3 பேர் கைது
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாண்டி (வயது 23), அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் (24), கோவை சாய்பாபா காலனி கே.கே.நகரையை சேர்ந்த கமலேஷ் (22) என்பதும், கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைதானவர்களின் கூட்டாளிகளான ராஜேஷ், கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.