

சின்னாளப்பட்டி:
சின்னாளப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 25). இவரது மனைவி கனகவல்லி (22). இந்தநிலையில் நேற்று முன்தினம், இவர், கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சின்னாளப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு உறவினர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கனகவல்லி கணவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதற்கிடையே கொரோனா விதிமுறை அமலில் உள்ளபோது போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதாக கனகவல்லி உள்பட 20 பேர் மீது சின்னாளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.