திருமருகல் அருகே செல்போனில் செயலி மூலம் கண்புரையை கண்டறியும் முகாம்

தமிழக அரசு தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் மூலம் கண்ணில் ஏற்படும் கண்புரையை கண்டறிந்து சிகிச்சை பெற வசதியாக செல்போனில் நவீன நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தி அதன் மூலம் குக்கிராமத்தில் உள்ளவர்கள் கூட நவீன சிகிச்சை பெற முடியும்.
திருமருகல் அருகே செல்போனில் செயலி மூலம் கண்புரையை கண்டறியும் முகாம்
Published on

திட்டச்சேரி,

தமிழக அரசு தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் மூலம் கண்ணில் ஏற்படும் கண்புரையை கண்டறிந்து சிகிச்சை பெற வசதியாக செல்போனில் நவீன நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தி அதன் மூலம் குக்கிராமத்தில் உள்ளவர்கள் கூட நவீன சிகிச்சை பெற முடியும்.

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர், போலகம் கிராமத்தில் வீடு, வீடாகச் சென்று செல்போனில் நவீன நுண்ணறிவு செயலி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த திட்டத்தினை மாநில திட்ட அலுவலர் டாக்டர் சந்திரகுமார் தொடங்கி வைத்து பேசினார்.

இதில் மாவட்ட திட்ட மேலாளர் பூபேஸ் தர்மேந்திரா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சண்முகசுந்தரம், நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாக்கத் அலி, திருமருகல் வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருமருகல் மருத்துவ அலுவலர் பிரித்திவிராஜ், திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) மனோகரன், சுகாதார ஆய்வாளர்கள் ரகுநாதன், ஆனந்தன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் 919 வீடுகளில் நடந்தப்பட்ட பரிசோதனையில், 67 பேருக்கு கண்புரை நோய், கண் பார்வை குறைபாடு கண்டறியப்பட்டது. அவர்களுக்கு நாகை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கண் மருத்துவ உதவியாளர் முருகேசன் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com