நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு; கண்காணிப்பு கேமராவில் சிக்கிய வாலிபருக்கு வலைவீச்சு

நங்கநல்லூரில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் சங்கிலி பறித்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு; கண்காணிப்பு கேமராவில் சிக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
Published on

சென்னையை அடுத்த நங்கநல்லூர் வீரராகவன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி தமிழரசி (வயது 68). இவர், நற்று அதிகாலையில் நங்கநல்லூர் 28-வது தெருவில் நடைபயிற்சிக்காக ரோட்டில் தனியாக நடந்து சென்றார்.அப்போது எதிரே நடந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென மூதாட்டி தமிழரசி கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு ஓடினார். அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, திருடன் திருடன் என கூச்சலிட்டார்.

அதிகாலை நேரம் என்பதால் அக்கம் பக்கத்தில் யாரும் உதவிக்கு வரவில்லை. தங்க சங்கிலியுடன் வாலிபர் தப்பி ஓடிவிட்டார். மூதாட்டியிடம் வாலிபர் சங்கிலி பறித்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுபற்றி பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com