நிலவேம்பு கசாயம் வினியோகம்

ராஜபாளையம் தொகுதியில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு டெங்குவை ஒழிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
நிலவேம்பு கசாயம் வினியோகம்
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சியில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு டெங்குவை ஒழிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். மேலும் அனைத்து வார்டுகளில் உள்ள நீர் தொட்டிகளில் மருந்து தெளிக்க உத்தரவிட்டார்.

அப்போது பேசிய அவர், ராஜபாளையம் தொகுதியில் டெங்கு காய்ச்சலால் 2014-ம் ஆண்டு அதிக உயிர் இழப்புகள் ஏற்பட்டது. ஆனால் தற்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக ஜமீன் கொல்லங்கொண்டான், சேத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், ராஜபாளையம் மகப்பேறு மருத்துவமனைக்கும் சட்டமன்ற நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து டெங்கு காய்ச்சல் கண்டறியும் கருவி வழங்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் உமாகாந்தன், டாக்டர் கனிமொழி, சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாகவே கொசு மருந்து தெளிக்கும் பணியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.இதேபோல ஆலங் குளம் அருகே உள்ள கல்லமநாயக்கர்பட்டி அரசு மருத்துவமனையில் செவல்பட்டி, தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைந்து டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தின. டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். டாக்டர்கள் பாலமுருகன், ரோஜர்பர்டன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் மதியரசு, ராகவன், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு உறுதி மொழி வாசிக்கப்பட்டது. சித்த மருத்துவர் திவ்யா பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கினார். கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com