

சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் நகரசபை 8-வது வார்டு வடகாசி அம்மன் கோவில் முதலாவது தெருவில் கடந்த 17 நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது பெரும்பாலான வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு தண்ணீர் வரவில்லை. மேலும் சிறிதுநேரத்தில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் தங்களது பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சங்கரன்கோவில் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முற்றுகையிட்டவர்களிடம் நகரசபை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து வடகாசி அம்மன் கோவில் முதலாவது தெருவில் மீண்டும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.