முன்னேற்பாடுகள் தொடர்பாக வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

முன்னேற்பாடுகள் தொடர்பாக வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
முன்னேற்பாடுகள் தொடர்பாக வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
Published on

ஊட்டி,

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் மையமாக ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது.

இங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழி, வாகனங்கள் நிறுத்துமிடம், வாக்கு எண்ணுவதற்கு போடப்படும் மேஜைகள், முகவர்கள் வந்து செல்லும் வழி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கும் அறை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் வாக்கு எண்ணும் நாளில் அனைத்து அலுவலர்களும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணிபுரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழுவினர் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளது. அந்த கருவி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதையும் கலெக்டர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், நிலவரி திட்ட அலுவலர் கீர்த்தி, சப்-கலெக்டர்கள் மோனிகா, ரஞ்சித்சிங், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜகுமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com