சமுதாய வளைகாப்பு விழா: கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்

அரியலூரில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. சீர்வரிசை பெற்ற பெண்களுடன் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர்.
சமுதாய வளைகாப்பு விழா: கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்
Published on

பெரம்பலூர்,

சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று பெரம்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். பெரம்பலூர் தொகுதி எம்.பி.மருதராஜா, எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன் (குன்னம்), தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமுதாய வளைகாப்பு விழாவிற்கு வந்திருந்த கர்ப்பிணி பெண்களுக்கு முன்னதாக உடல் நல பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, ரத்தப்பரிசோதனை, உயரம், எடை ஆகியவை மருத்துவக்குழுவினரால் சோதனை செய்யப்பட்டது. மேலும் கர்ப்ப காலத்தில் 10 கிலோ எடை கூடுதல், சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளுதல், தாய்ப்பாலின் அவசியம், மருத்துவமனை பிரசவம், சீம்பாலின் அவசியம், மற்றும் இணை உணவு குறித்து மருத்துவ அலுவலரால் விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com