திருவள்ளூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இருந்து சைக்கிள் பேரணி மற்றும் மாட்டு வண்டி ஊர்வலம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி
Published on

பேரணியை பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சதாசிவலிங்கம், மீஞ்சூர் பொன்னேரி நகர காங்கிரஸ் தலைவர்கள்

துரைவேல்பாண்டியன், கார்த்திகேயன், மாவட்ட துணைத்தலைவர் பிரகாசம், வட்டார தலைவர் ஜெலந்தர், செயலாளர் கோவர்த்தனன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருத்தணி கமலா திரையரங்கம் அருகே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற கோரி கமலா திரையரங்கம் அருகே சைக்கிள் பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் டி.கோவிந்தராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன், நெசவாளர் அணி தலைவர் சுந்தரராஜன், வட்டார தலைவர் முருகன், நகர தலைவர் பார்த்திபன் உள்பட 150-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாட்டு வண்டி ஊர்வலம், மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. போராட்டத்தில் வட்டார தலைவர் மதன்மோகன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சம்பத், மாவட்ட செயலாளர் சிவா ரெட்டி நகரத்தலைவர் குணசேகரன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com