கொரோனா பாதிப்பால் கிராம நிர்வாக அலுவலர் சாவு

ஆவடி, கொரோனா பாதிப்பால் கிராம நிர்வாக அலுவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனா பாதிப்பால் கிராம நிர்வாக அலுவலர் சாவு
Published on

ஆவடி,

ஆவடியை அடுத்த மிட்டனமல்லியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 51). இவர், ஆவடி அடுத்த மோரை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த 31-ந்தேதி அவருக்கு தீவிர காய்ச்சல் இருந்ததால் அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ஆக்சிஜன் பிரச்சினை ஏற்பட்டதால் உடனடியாக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் நேற்று அதிகாலை கிராம நிர்வாக அலுவலர் தங்கமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவரது உடல் மிட்டனமல்லியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த தங்கமணி வருவாய்த்துறையில் கிராம நிர்வாக முன்னேற்ற சங்க ஆவடி வட்ட பொருளாளராக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com