விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 65 ஆயிரத்து 48 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 409 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ட்டது தெரியவந்தது.

16,077 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,468 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,415 ஆக உயர்ந்துள்ளது.

வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில்1,457 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 2,400- க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை இருந்தது.

மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தாலும் மாவட்ட சுகாதாரத்துறையினர் அதற்கான நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது.

தினசரி 2,500 முதல் 3,000 பேர் வரையிலான மருத்துவ பரிசோதனை முடிவுகள் நிலுவையில் இருந்து வருகிறது. மருத்துவப் பரிசோதனை முடிவுகள் தாமதப்படுத்தபடுவதால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகம் முடிவுகளை விரைவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com