

பொன்னேரி,
பொன்னேரி அடுத்த சோழவரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 8 கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து சோழவரம் போலீஸ் நிலையம் நேற்று மூடப்பட்டது. ஒரக்காடு சந்திப்பில் உள்ள அரசு ஒன்றிய ஆரம்பப் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக போலீஸ் நிலையம் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா தோற்று காரணமாக சோழவரம் போலீஸ் நிலையம் 3-வது முறையாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.