கேரளாவில் கொரோனா அதிகரிப்பு எதிரொலி; குமரியில் அன்னாசி பழம் ஏற்றுமதி பாதிப்பு; விவசாயிகள் கவலை

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் குமரியில் அன்னாசிபழம் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
அறுவடைக்காக காத்திருக்கும் அன்னாசிபழங்கள்.
அறுவடைக்காக காத்திருக்கும் அன்னாசிபழங்கள்.
Published on

அன்னாசிபழம் சீசன்

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, கோதையாறு, கற்றுவா பனச்சமூடு, அருமனை, குலசேகரம், வேளிமலை, குமாரபுரம், சித்திரங்கோடு போன்ற பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் ஊடுபயிராக அன்னாசி பழம் பயிரிடப்படும். தற்போது அன்னாசி பழ சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. பொதுவாக சீசன் காலத்தில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படும். அத்துடன் கேரளாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்வது வழக்கம். தற்போது கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அன்னாசி பழ வியாபாரிகள் குமரிக்கு வருவது வெகுவாக குறைந்துள்ளது.

கோரிக்கை

இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் சாலையோரங்கள் முதல் பெட்டிக்கடைகள் வரை அன்னாசி பழம் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.15 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏராளமான அன்னாசிபழம் விற்பனையாகாமல் அழுகி வீணாகுகிறது. இதனால் அன்னாசி பயிர் விவசாயிகள் மட்டுமல்லாது வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தமிழக அரசு வெளி மாவட்டங்களுக்கோ அல்லது பிற மாநிலத்துக்கோ கொண்டு சென்று விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com