சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
Published on

ஆண்டிமடம்,

அரியலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக சுகாதாரத்துறையில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் அசோக சக்கரவர்த்தி தலைமை தாங்கி கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசினார். மேலும் கொரோனா தடுப்பூசியை முதலாவதாக அவர் போட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து முன்கள பணியாளர்கள் ஒவ்வொருவராக ஆர்வமுடன் முன்வந்து தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆய்வக நுட்புனர்கள், ஓட்டுனர்கள், ஆண் செவிலிய உதவியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள், மற்றும் தற்காலிக களப்பணி மஸ்தூர்கள் உள்பட 44 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சுகாதாரத்துறையை தொடர்ந்து மற்ற துறையை சார்ந்தவர்களுக்கும் படிப்படியாக தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com