கொரோனா வைரஸ் ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு மருத்துவ உதவி சரத்பவார் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வலியுறுத்தினார்.
கொரோனா வைரஸ் ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு மருத்துவ உதவி சரத்பவார் வலியுறுத்தல்
Published on

மும்பை,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. ஈரான் நாட்டில் இதுவரை 194 பேரை பலிவாங்கி உள்ளது. ஏராளமானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். வியாழக்கிழமை மட்டும் 6,566 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஈரான் நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கி உள்ளனர். இவர்களில் பலர் அங்குள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். மராட்டியம், தமிழகம், கேரளாவில் இருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்தநிலையில், ஈரானில் உள்ள கோம் நகரில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவிக்கின்றனர்.

அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கோம் நகரில் தவிக்கும் இந்தியர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்யும்படி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கோம் நகரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் குறித்த எனது கவலையை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் தெரிவித்தேன். மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். அவர்களுக்கு அவசர மருத்துவ மற்றும் அடிப்படை உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com