கொரோனா வைரஸ் மிகப்பெரிய ஆபத்து பொதுமக்கள் அரசு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் - சரத்பவார் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் மிகப்பொய ஆபத்து, பொதுமக்கள் அரசு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா வைரஸ் மிகப்பெரிய ஆபத்து பொதுமக்கள் அரசு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் - சரத்பவார் வலியுறுத்தல்
Published on

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகநூல் மூலம் பொது மக்களை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் பூகம்பம், வறட்சி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் தற்போது உள்ள மிகப்பெரிய ஆபத்து (கொரோனா வைரஸ்) மிகவும் மோசமானது. எனவே பொதுமக்கள் அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும். நாம் அரசின் உத்தரவுகளை பின்பற்ற தவறினால், எல்லோரும் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சரத்பவார் முகநூலில் பேசிக்கொண்டு இருந்தபோது, சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே, பொதுமக்களை வீடுகளில் இருக்க வலியுறுத்துமாறு சரத்பவாரிடம் கேட்டுக்கொண்டார். அப்போது சரத்பவார், உங்களுக்கும், உங்கள் அணியினரின் முயற்சிக்கும் ஆதரவு அளிப்பது எங்களின் கடமை. நான் வீட்டிலேயே இருக்கிறேன். வெளியே வரமாட்டேன் என்றார்.

இதேபோல பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டு கொண்ட சரத்பவார், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை அனுமதிக்குமாறு போலீசாரை வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com