

தேவகோட்டை
தேவகோட்டை கார்ப்பரேஷன் தெருவில் வசிப்பவர் குணசேகரன் (வயது 60) எலக்ட்ரீசியன். நேற்று இவர் தேவகோட்டை எம்.எம். நகரில் வசிக்கும் ஷாஜகான் என்பவர் வீட்டில் மின்விசிறி மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குணசேகரனை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.