ஆபத்தான நிலையில் காட்சியளிக்கும் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றித்தர பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சீபுரம் மாவட்டம், ஆபத்தான நிலையில் காட்சியளிக்கும் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றித்தர பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
ஆபத்தான நிலையில் காட்சியளிக்கும் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றித்தர பொதுமக்கள் கோரிக்கை
Published on

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையிலிருந்து மறைமலைநகர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக ஆத்தனஞ்சேரி சாலை உள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், சாலையின் ஓரமாக அமைந்துள்ள 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த மின்கம்பங்களில் உள்ள சிமெண்ட் பூச்சுக் கலவை பெயர்ந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிப்பதால், பலத்த காற்று வீசும் போது கீழே சாய்ந்து விழுந்து விடுமோ என்று அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

இந்த மின்கம்பங்கள் அமைந்துள்ள இடத்தில் ஒருபுறம் சாலையும், மறுபுறம் குடியிருப்புகளும் இருப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் உயிருக்கு பயந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த மின் கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை உடனடியாக மாற்றித்தர வேண்டும் என்று மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com