காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம் மருந்தாளுனர்கள் சங்கம் சார்பில் நாளை நடக்கிறது

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி மருந்தாளுனர்கள் சங்கம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம் மருந்தாளுனர்கள் சங்கம் சார்பில் நாளை நடக்கிறது
Published on

திருவாரூர்,

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவாரூர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாநில பொருளாளர் விஸ்வேஸ்வரன், மாநில செயலாளர் ராமநாதகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சுப்பிரமணியன் பேசினார்.

ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மக்கள் நலன் கருதி கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 750 மருந்தாளுனர்கள் பணியிடங்களை உடனியாக அரசு நிரப்ப வேண்டும். சுகாதார செயலாளர் தலைமையில் ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசாணை வெளியிட வேண்டும். கடந்த 8 ஆண்டுகளாக நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் மருந்தாளுனர்களை பணி வரன் முறைப்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com