டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்
Published on

புதுச்சேரி,

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. இதுவரை 1,010 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் மட்டுமே இறந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு 400 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர்.

2017-ல் 4 ஆயிரம் பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறி இறங்குகிறது. புதுவை மக்களின் ஒத்துழைப்பு, விழிப்புணர்வு காரணமாக டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. தகுந்த சிகிச்சை கிடைப்பதால் இறப்பு குறைந்துள்ளது.

கவர்னர் கிரண்பெடியிடம் அதிகாரிகள் கூட்டம் போடக்கூடாது என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது. இதையும் மீறி ஏனாம் வந்து கூட்டம் நடத்தினார். அங்கு மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் தனிப்பட்ட முறையில் வந்ததாக தெரிவித்தார்.

அவரது பயணத்தின்போது ஏற்பட்ட செலவினங்கள், ஏற்பாடுகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com