“அ.தி.மு.க. அரசின் செயல்பாடு பற்றி பேசினாலே வழக்கு போடுகிறார்கள்” கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி..

“அ.தி.மு.க. அரசின் செயல்பாடு பற்றி பேசினாலே வழக்கு போடுகிறார்கள்” என்று நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
“அ.தி.மு.க. அரசின் செயல்பாடு பற்றி பேசினாலே வழக்கு போடுகிறார்கள்” கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி..
Published on

நெல்லை,

நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்ட போது, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பஸ்கள் மீது கல் வீசப்பட்டது. நெல்லை அருகே ஒரு பஸ் மீது கல்வீசியது தொடர்பாக நாஞ்சாங்குளத்தை சேர்ந்த கார்த்திக் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. இதைத்தொடர்ந்து கார்த்திக் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இவர், கருணாஸ் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவர் ஆவார். இந்த நிலையில் நடிகர் கருணாஸ் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேற்று காலை வந்தார். அவர், கார்த்திக்கை சந்தித்து பேசினார்.

பின்னர் கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை பற்றி குறைகள்தான் கூற முடியும். ஏதாவது சொன்னால் என் மீது வழக்குப்பதிவு செய்வார்கள். அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளை பற்றி பேசினாலே வழக்கு போடுகிறார்கள். அதனால் நான் இந்த ஆட்சியை பற்றி விமர்சனம் செய்து பேசுவதை தவிர்த்து வருகிறேன்.

சாதாரண விமானம் பறந்தாலே அது எந்த இடத்தில் பறக்கிறது என்பதை ரேடார் மூலம் கண்டுபிடிக்க முடியும். ஆனால், இந்த அரசு கஜா புயலை பற்றி 3 நாளாக மிகப்பெரிய அளவில் பேசி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com