தினகரன் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
தினகரன் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Published on

சேலம்,

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

ஓமலூர் பஸ்நிலையம் அண்ணா சிலை அருகே நேற்று மதியம் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி னர். ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மணி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பாசறை செயலாளர் சுதர்சனம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், கருப்பூர் நகர செயலாளர் ஆறுமுகம், ஓமலூர் நகர செயலாளர் அருண்சங்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றதையொட்டி மேச்சேரியில் அவரது ஆதரவாளர்கள் மேச்சேரி பஸ்நிலையம் அருகில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் சேலம் புறநகர் மாவட்ட பாசறை செயலாளர் சுதர்சன், தொகுதி பொறுப்பாளர் சின்னான், ஒன்றிய பொறுப்பாளர் விஸ்வநாதன், நகர பொறுப்பாளர்கள் ரமேஷ், இளங்கோ, வஜ்ரவேல், கண்ணபிரான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தலைவாசலில் வடக்கு ஒன்றிய செயலாளர் கோமதுரை தலைமையில் தலைவாசல் பஸ் நிலையம், யூனியன் அலுவலகம் அருகில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா, மாரிமுத்து, சிறுவாச்சூர் பெரியசாமி, பன்னீர்செல்வம், வரகூர் நல்லதம்பி, வையாபுரி, சார்வாய் கண்ணன், காட்டுக்கோட்டை மகேந்திரன், செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எடப்பாடியில் டி.டி.வி. தினகரன் அணியைச்சேர்ந்த துணை செயலாளர் முன்னாள் கவுன்சிலர் வடிவேல் தலைமையில் இளைஞரணி செயலாளர் பாலு முன்னிலையில் எடப்பாடி பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர். மகளிர் அணி வசந்தி, காளியம்மாள், உதயகுமார், பொன்ராசு, அருளப்பன், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பக்கநாடு மேட்டுத்தெரு பகுதியில் மாநில பொதுக்குழு உறுப்பினரும், பக்கநாடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான வெங்கடாஜலபதி தலைமையில் ஊர்வலமாக சென்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். கூட்டுறவு சங்க தலைவர் வெள்ளையன், இயக்குனர் சண்முகம், செங்கோடன், ராஜேந்திரன், சின்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றதையொட்டி அவருடைய ஆதரவாளர்கள் நரசிங்கபுரம் நகரசபை முன்னாள் தலைவர் எம்.காட்டுராஜா தலைமையில் ஆத்தூர் பஸ்நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அங்கு பட்டாசு வெடித்தனர். பஸ்நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் என்.ராஜேந்திரகுமார், எம்.ஆண்டவர், கணேசன், கருப்பையா, செந்தாமரை, மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆட்டையாம்பட்டி, ரவுண்டானா, நைனாம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகில், எஸ்.பாலம் பஸ் நிறுத்தம் அருகில், உள்பட பல்வேறு இடங்களில் தினகரன் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினார்கள். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் இந்திரா ஆறுமுகம், பூங்கொடி மாரிமுத்து மற்றும் என்.எஸ்.நடராஜன், சீனி, பெத்தாம்பட்டி கந்தன், நடராஜன், கடத்தூர் பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முத்தனம்பாளையம் கூத்தங்காடு பகுதியில் ராமன், லட்சுமணன் மற்றும் பலர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினார்கள்.

சங்ககிரி புதிய எடப்பாடியில் சேலம் மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதில், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மாணிக்கசுந்தர், நிர்வாகிகள் கார்த்தி, சங்கர், முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டி.டி.வி.தினகரன் வெற்றியை தொடர்ந்து தம்மம்பட்டி பஸ்நிலையத்தில் ரெயின்போ முருகேசன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com