கடமலைக்குண்டு அருகே 16-ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு

கடமலைக்குண்டு அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்லுடன் தமிழ் ஆசிரியர் செல்வம்
கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்லுடன் தமிழ் ஆசிரியர் செல்வம்
Published on

நடுகல் கண்டுபிடிப்பு

கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர் ஆசிரியர் பணியோடு தொல்லியல் சார்ந்த பழமையான சான்றுகளை கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று கடமலைக்குண்டு கன்னிமார் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள தனியார் தோட்ட பகுதியில் மண்ணில் புதைந்திருந்த நடுகல் ஒன்றை அவர் கண்டுபிடித்துள்ளார். 16-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் அந்த நடுகல் குறித்து அவர் கூறியதாவது:-

கடமலைக்குண்டு பகுதியை சுற்றிலும் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்வேறு நடுகற்களும், சதி கற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுகல் பல்வேறு வகைகளில் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நடுகல்லில் 2 வீரர்களின் உருவம் உள்ளது. அதில், வலது பக்கம் இருக்கும் வீரனின் தலைப்பகுதி உடைந்த நிலையில் உள்ளது. அவனின் இடது கையில் துப்பாக்கி உள்ளது. இடது பக்கம் இருக்கும் வீரனின் முகம் சிதைந்து காணப்படுகிறது. அந்த வீரன் இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருப்பதுடன், அவனது 2 கால்களுக்கு இடையில் இரும்பு குண்டு

தொங்கவிடப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டது போல் காணப்படுகிறது.

16-ம் நூற்றாண்டு

2 வீரர்களின் அணிகலன்களிலும், ஆடைகளிலும் வீரக்கழல் அணிந்திருப்பதிலும் ஒரே மாதிரியான வேலைப்பாடுகள் காணப்படுகிறது. எனவே 2 பேரும் குறுநில மன்னர்களாகவோ அல்லது இப்பகுதியில்

முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவோ இருந்திருக்கக்கூடும். ஏதோ ஒரு காரணம் கருதி 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் வெற்றி பெற்றவர் தோல்வியடைந்தவரை கைவிலங்கிட்டு பணிந்து வணங்கிய காட்சி நினைவு கல்லாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இந்த நடுகல் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில் நடப்பட்ட நினைவுகளாக இருக்கும். மேலும் இதுபோன்ற வரலாற்று பழமை வாய்ந்த சான்றுகள் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. எனவே அவை அழிந்து போவதற்கு

முன்பு அரசு கவனம் செலுத்தி பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com