கோவில்பட்டியில் மதுவிலக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் மதுவிலக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் நேற்று வினியோகம் செய்யப்பட்டது.
கோவில்பட்டியில் மதுவிலக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
Published on

கோவில்பட்டி,

மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேல் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி தொடங்கி வைத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பவுல், போலீஸ் ஏட்டுகள் சேதுராஜ், ராஜகோபால், சத்யபாமா, சித்ரா, சரவணமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் வரையறுக்கப்பட்ட நேரத்துக்கு பிறகு செயல்பட்டாலோ அல்லது யாரேனும் கள்ளசாராயம் காய்ச்சினாலோ, கள் இறக்கினாலோ, எரி சாராயம் கடத்தி வந்தாலோ, வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கொண்டு வந்து விற்பனை செய்தாலோ, கட்டணமில்லா தொலைபேசி எண் 10581-க்கு அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வாகனங்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com