

காங்கேயம்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதன் காரணமாக சாதாரண கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் இழந்து அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.என்.என்.நடராஜ், ஆலாம்பாடி ஊராட்சியில் உள்ள நெய்க்காரன்பாளையம், கல்லெரி, சகாயபுரம், ஆண்டிமடக்காடு உள்ளிட்ட 1600 ரேஷன் கார்டு தாரர்களுக்கு 10 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், டீ தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போது ஒன்றிய கவுன்சிலர் மைனர்பழனிசாமி, என்.எஸ்.என்.தனபால், மாவட்ட பிரதிநிதி காமாட்சிபுரம் மணி, ஊராட்சி செயலாளர் என்.நடராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.