மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி.-யு.கே.ஜி. பயிலும் மழலைகளுக்கும் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்தது. போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக விளையாட்டு வீரர்- வீராங்கனைகளின் அணி வகுப்பு மரியாதையை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராமசுப்பிரமணியராஜா ஏற்றுக்கொண்டார். போட்டியினை பெரம்பலூர் மாவட்ட ஒலிம்பியா விளையாட்டு அகாடமியின் தலைவர் அரவிந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சரவணன், தலைமை பயிற்சியாளர் கோகிலா உள்பட பலர் உடனிருந்தனர்.

மழலை மற்றும் மாணவ- மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயமும், மாணவ- மாணவிகளுக்கான நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டது. 3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கான பேட்மிண்டன், டென்னிஸ் போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர் களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட ஒலிம்பியா விளையாட்டு அகாடமியினர் செய்திருந்தனர். போட்டிகளில் பங்கேற்ற வந்த மழலைகளை அவரது பெற்றோர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com